நமது உடல் இயக்கத்திற்கு ஸ்டாமினா தேவைப்படுகிறது.இந்த ஸ்டாமினா குறைந்தால் உடல் சோர்வு,உடல் பலவீன உணர்வு ஏற்படும்.உடலுக்கு தேவையான ஸ்டாமினா கிடைக்க நீங்கள் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வேர்க்கடலை – ஒரு பிடி
2)வெல்லம் – ஒரு துண்டு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கைப்பிடி வேர்க்கடலையை கிண்ணம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.பச்சை வேர்கடலையாக இருக்க வேண்டும்.நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊறவைத்த பிறகு தண்ணீரை வடிகட்டிவிட்டு வேர்க்கடலையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த வேர்கடலையுடன் ஒரு துண்டு வெல்லத்தை வைத்து சாப்பிட வேண்டும்.இப்படி காலையில் வேர்க்கடலை வெல்லம் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)மூக்கு சுண்டல் – 50 கிராம்
2)வேர்க்கடலை – 50 கிராம்
செய்முறை விளக்கம்:-
ஒரு கிண்ணத்தில் 50 கிராம் மூக்கு சுண்டல் மற்றும் 50 கிராம் வேர்க்கடலை போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.
நாள் முழுவதும் ஊறிய இந்த இரண்டு பொருளையும் பின்னர் தண்ணீர் வடித்துவிட்டு பச்சையாக மென்று சாப்பிட வேண்டும்.இப்படி சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வேர்க்கடலை – 50 கிராம்
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றில் பச்சை வேர்க்கடலை போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பிறகு இதை காலை நேரத்தில் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.இந்த வேர்க்கடலையை சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.