Chhattisgarh: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் பாலியல் குற்றம் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டத்தில் 9 வயது தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் நீல்காந்த், நிதின் யாதவ் என்ற இருவர் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் கைது செய்யப்பட நீல்காந்த் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுமி இறந்த பின் பிணத்துடன் உடலுறுவு வைத்து கொண்டு இருக்கிறார் என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், நீல்காந்த் தன்னை போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். எனவே, அவரது மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் அவரை போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்க உத்தரவு வழங்கியது. எனவே, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சிறுமியின் பெற்றோர் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள்.
எனவே இரு தரப்பு வாதங்களை விசாரணை செய்த நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா, பிபு தத்தா குரு ஆகியோர் அடங்கிய குழு 9 வயது தலித் சிறுமி கொலை செய்த இந்த வழக்கு போக்சோ மற்றும் பலாத்கார குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என தீர்ப்பு வழங்கினார்கள். அதற்கு, நீதிபதிகள் அளித்த விளக்கத்தில் பலாத்கார குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் பாதிக்கப்பட்ட பெண் உயிருடன் இருக்க வேண்டும்.
அந்த பெண்ணை கொலை செய்ததற்கு தனி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சடலத்துடன் உடலுறவு கொள்வது நெக்ரோபிலியா எனும் வகை ஒருவித மனநோய் என்று கூறி இருப்பது பரப்பை ஏற்படுத்தி வருகிறது. “நெக்ரோபிலியா” என்ற மன நோய் இருப்பவர் பிணத்துடன் உறவு வைப்பது அல்லது மயங்கி கிடப்பவர்களை வன்புணர்வு செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பார்கள்.