தடுப்பூசி போட்டுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் சென்னையில் இருக்கின்ற ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதிலும் இந்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அதேபோல சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்களும் இந்த தடுப்பூசியை உபயோகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த விதத்தில் தமிழ்நாட்டில் இந்த தடுப்பூசியை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட கமல்ஹாசன், திருமாவளவன் என்று எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஊசியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் இந்த ஊசி மிகவும் பாதுகாப்பானது. அதேபோல அனைவரும் நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தற்காப்பு கவசங்களாக கவசத்தை அணிய வேண்டும் என்று கூறினார். அதேபோல நோய்த்தடுப்பு விதிமுறைகளையும் தெரிவித்திருக்கின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.