முதல்வர்- நடிகர் விஷால் சந்திப்பு? டிசம்பர்-27ஆம் தேதி சந்திக்க அழைப்பு

0
80
Actor Vishal
Actor Vishal

முதல்வர்- நடிகர் விஷால் சந்திப்பு? டிசம்பர்-27ஆம் தேதி சந்திக்க அழைப்பு

நடிகர் விஷாலை சந்திக்க முதல்வர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் சண்டைகோழி என்ற படத்தில் அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகர் சங்கதலைவராகவும் இருந்த இவர் தற்போது லத்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.சுனைனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ராணா புரொடக்சன் சார்பில் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்க வினோத் குமார் இயக்கி உள்ளார்.

இன்று திரையரங்குகளில் ரீலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை இந்த படம் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து லத்தி படத்தின் ப்ரோமோசனுக்காக ஆந்திரா சென்ற நடிகர் விசாலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விசாலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஆந்திராவில் வரும் 2024- இல் நடைபெறும் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி நடிகர் விஷாலை சந்திர பாபுவுக்கு எதிராக நிறுத்த போவதாக தகவல் வெளியான நிலையில் விசால் அதனை மறுத்துள்ளார்.செய்தியாளர்களை சந்தித்த அவர் தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை என்றும்,சந்திர பாபு நாயுடுவுக்கு எதிராக குப்பம் தொகுதியில் போட்டியிட போவதில்லை எனவும் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் விஷால்-ஜகன் மோகன் ரெட்டி வருகின்ற டிசம்பர்-27 ஆம் தேதி சந்திக்க போவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. விஷால் ஏற்கனவே ஜகன் மோகன் ரெட்டியை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளதால் இவர்களது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.