முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர்!

Photo of author

By Parthipan K

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர்!

Parthipan K

இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 58 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் பங்கேற்றனர்.

பசும்பொன்னில் இருக்கும் முத்துராமலிங்க தேவரின் திரு உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அதிமுக கட்சி சார்பில் முக்கிய பிரமுகர்களும் கட்சி தொண்டர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். 

பசும்பொன்னுக்கு செல்ல முக்கியமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.