தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! படுகுஷியில் இ.பி.எஸ்!

0
135

தமிழக சட்டசபை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று முன் தினம் நடந்து முடிந்தது.தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 88 ஆயிரத்தி 937 வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்றபடி தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அனைத்து பொதுமக்களும் வாக்குப்பதிவை மேற்கொண்டார்கள்.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டது தேர்தல் ஆணையம். அதில் தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளில் மொத்தமாக 72.78சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வாக்குசதவீதமானது கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிட்டுப்பார்த்தால்2.03 சதவீதம் குறைவாக இருக்கிறது. அதாவது 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 74.81 சதவீத வாக்குகள் பதிவாகின. நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதமும் குளித்தலையில் 86 6. சதவீதமும் எடப்பாடி சட்டசபைத் தொகுதியில் 85.6 சதவீதமும் வீரபாண்டி தொகுதியில் 85.53 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

குறைந்த பட்சமாக வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் 55.52 சதவீதமும், டி நகர் சட்டசபை தொகுதியில் 55.92 சதவீதமும், வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் 55.95 சதவீதமும், மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் 56.59 சதவீதமும், அண்ணாநகர் சட்டசபைத் தொகுதியில் 57.2 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இத்தேர்தலில் தமிழகத்தில் 5 முனை போட்டி மற்றும் 5 முதலமைச்சர் வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள்.

அதிமுக சார்பில் முதல்வர் வேட்ப்பளராக களம்கண்ட இ.பி.எஸின் எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகளும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் சட்டசபைத் தொகுதியில் 6.52 சதவீதமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிட்ட டிடிவி தினகரனின் கோவில்பட்டி தொகுதியில் 67.4 3 சதவீதமும் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீதமும் கமல் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் 60.72சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Previous articleவிடாது துரத்தும் கொரோனா! மீண்டும் லாக்டௌன்?
Next article“வருமுன் காப்பதே சிறந்தது” என்பதற்கு ஏற்ப மோடி செய்த காரியம்!