அணை திறப்பு விழாவில் எம்.பி.யின் இடுப்பை பிடித்த முதல்வர்…!!

Photo of author

By Parthipan K

காவிரி நீர் திறப்பு விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, எம்.பி. சுமலதாவின் இடுப்பை பிடித்த காட்சி இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் காவிரி நீர் திறப்பு விழா நடந்தது. பிஎஸ் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இதற்காக ஸ்ரீரங்காபாட்னா தாலுக்காவில் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாண்டியா பாஜக நிர்வாகிகள், மைசூர், மாண்டியா எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த அணை திறப்பு விழாவிற்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், அதே தொகுதியை சேர்ந்த நடியையும் சுயேட்சை எம்.பி.யுமான சுமலதாவும் வருகை புரிந்திருந்தார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து காவிரி நீரில் பூக்களை தூவி, பின் அணையை திறந்தனர்.

நீரில் பூ போடும் போது எம்.பி. சுமலாதாவின் இடுப்பில் முதல்வர் எடியூரப்பா கை வைப்பது போல சில வீடியோ காட்சிகள் பதிவாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து முதல்வர் எடியூரப்பாவிடம் சுமலதா கோபத்தில் பேசுவது போலவும் சில காட்சிகள் பதிவாகி உள்ளது. உண்மையில் சுமலதா கோபத்தில் தான் பேசினாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிகழ்விற்கு பின் எடியூரப்பா, சுமலதாவின் இடுப்பில் இருந்து உடனே கையை எடுத்ததும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தற்போது  முதல்வருக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளனர். மேலும், இந்த வீடியோ இணையதளத்தில் பரவி வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுமலதா. இவர் பிரபல நடிகர் அம்பரீஷ்ரின் மனைவி ஆவார். கர்நாடகாவில் இருக்கும் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக நின்று இவர் நாடாளுமன்றத்திற்கு எம்.பி.யாக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.