திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார்மயம்: அதானி குழுமத்திற்கும் கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கும் இடையே தொடர்பு?

0
129

அதானியின் குழுமத்திற்கும், கேரள கம்யூனிஸ்ட் அரசிற்கும் இடையே ஏற்கனவே தொடர்பு இருப்பதாக கேரளாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திற்கு குத்தகையாக மத்திய அரசு வழங்கியுள்ளது. கேரள அரசு இந்த முடிவினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும் மத்திய அரசின் இந்த முடிவிற்கு அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி என அனைவரும் கேரளா அரசிற்கு உறுதுணையாக இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கேரளாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது, “திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு விடும் மத்திய அரசின் இந்த முடிவினை கடுமையாக எதிர்க்கிறோம்.

Trivandrum Airport Privatization: The link between the Adani Group and the Communist government of Kerala?
Trivandrum Airport Privatization: The link between the Adani Group and the Communist government of Kerala?

 

இந்த நிலையில், அதானி குழுமத்தின் நெருங்கிய உறவினரின் சட்ட நிறுவனமான சிரில் அமர்சந்த் மங்கல்தாஸ் நிறுவனத்திடம் கேரள கம்யூனிஸ்ட் அரசு ஏற்கனவே ஏலம் குறித்த விவகாரத்தில் ஆலோசனை கேட்டு செயல்பட்டதாக வெளியாகி உள்ள தகவல்கள் சந்தேகத்தை எழுப்புகின்றன.

மேலும் இந்த சந்தேகம் உண்மையாக இருக்கும் எனில், அதானி குழுமத்திற்கும், கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவே எடுத்துக்கொள்ளப்படும். விமான நிலையத்தை ஏலத்தில் எடுக்கும் போட்டியாளர்களில் கேரள அரசு, அதானி குழும நிறுவனமும் போட்டியிட்டது.

இருப்பினும், அதானி குழுமமும், கேரளா அரசும் சட்ட ஆலோசனைகளை சிரில் அமர்சந்த் மங்கல்தாஸ் நிறுவனத்திடமே பெற்றுள்ளனர்.

இந்த இடத்தின் முடிவில் அதானி குழுமம் வெற்றி பெற்றதை அடுத்து தீவிரமான சந்தேகங்களையும், நம்பகத்தன்மை இல்லாத போக்கினையும் ஏற்படுத்துகிறது. இந்த சந்தேகத்திற்கான பதிலை ஆளும் இடதுசாரி ஜனநாயக அரசு தான் கூற வேண்டும்” என கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.

Previous articleபங்குச்சந்தையில் இரட்டிப்பு லாபம் பெற்ற பங்குகள்!!
Next articleஅணை திறப்பு விழாவில் எம்.பி.யின் இடுப்பை பிடித்த முதல்வர்…!!