தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் நேற்று ஏப்ரல் 26 அன்று காலநிலை சுற்றுச்சூழல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் நடைபெற்றது.
இந்த மானிய கோரிக்கையின் பொழுது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
ஏப்ரல் 1 ஆம் தேதி 2025 முதல் நடைமுறைப்படுத்தப்படும் ஓய்வூதியத்தின் விவரங்கள் :-
✓ முன்னாள் எம்எல்ஏ காலுக்கான மாதாந்திர ஓய்வூதியம் தற்பொழுது 30000 இருந்து 5000 ரூபாய் உயர்ந்து 35000 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ இறந்த முன்னாள் எம்எல்ஏக்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 15,000 குடும்ப ஊதியம் ஆனது தற்பொழுது 2000 ரூபாய் உயர்த்தப்பட்ட 17,000 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ அதேபோன்று , முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சில் உறுப்பினர்களின் ஆண்டு மருத்துவ உதவி தொகை 75,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் மேற்கொண்ட தியாகங்களுக்காகவும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அவர்களின் பங்களிப்புக்காகவும் இந்த அங்கீகாரம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் நடைபெற்ற மாநில கோரிக்கையின் பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.