கண் தானம் செய்பவர்களுக்காக புதிய இணையதளத்தை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் கண் தானம் செய்ய விரும்புவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு மாநில நலவாழ்வு குழுமத்தினால் உருவாக்கப்பட்ட இணையதளத்தை இன்று துவக்கி வைத்தார்.
நம் நாட்டில் சுமார் 68 லட்சம் மக்கள் கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பெருமளவில் குழந்தைகளும் ,இளைஞர்களும் இருப்பதாக கூறினார். தற்போது உள்ள மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஒரு நபரின் கண்களை தானமாக பெறப்பட்டு, கண்கள் எளிய கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரு நபர்கள் கண் பார்வை பெற்று பயனடைய இயலும் என்றும், கூடுதலான கண்களை திறந்து பாகங்களும் தேவைக்கேற்ப கண்பார்வை சிகிச்சையும் செய்யப்படுவதாக முதல்வர் கூறினார்.
பொதுவாக கண்தானம் செய்ய விரும்புவோர் யாரிடமாவது உறுதிமொழி கேட்பதும், இறந்த பிறகு எவ்வாறு ,எங்கு ,எப்படி கண்களை தானமாக கொடுப்பது என்ற விரிவாக தெரிவதில்லை என்பதால் ,கண் தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளனர் . http://www.hmis.tn.gov.in/eye-donor என்ற இணையத்தளம் மூலம் கண் தானம் செய்யலாம்.
இணையதளம் மூலம் கண்தானம் செய்ய விரும்புவோர் தங்களது பெயர் ,இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் குறிப்பு போன்ற தகவல்களை பதிவு செய்து கண்கள் தானம் செய்து, அதற்காக உறுதிமொழியின் ஏற்ற பின் அதற்கான சான்றிதழ்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். இந்த பதிவின் மூலம் கண் தானம் செய்வோர் களிடமிருந்து பெறப்படும் கண்கள் மருத்துவக் குழுவால் பெறப்பட்டு உரிய காலத்தில் கண் வங்கியில் சேர்த்திட மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.
கண் தான தினத்தையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உறுதிமொழியை அளித்ததை தொடர்ந்து அதற்கான சான்றிதழ்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அவர்கள் முதல்வருக்கு வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.