பெருமாளை தரிசிக்க சென்றுள்ள முதல்வர் பழனிசாமி.. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

முதல்வர் பழனிசாமி அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்வதத்தை வழக்கமாக கொண்டிருக்கிறார்.  

மேலும் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக சில மாதங்களாக அவர் சுவாமி தரிசனம் செய்யாமல் இருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் திருப்பதி சென்றுள்ளார் எனவும், இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்யப் போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்தவகையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு குடும்பத்துடன் காரில் புறப்பட்டு திருப்பதி  சென்றுள்ளார் எடப்பாடி. 

மேலும் எடப்பாடி இன்று காலை தரிசனத்தை முடித்துவிட்டு மாலையே சென்னை திரும்புகிறார் என்று சொல்லப்படுகிறது.

எனவே முதல்வர் சாலை மார்க்கமாக சென்று திரும்புவதால் செல்லும் வழியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.