Breaking News

பன்னீர்செல்வத்தை பற்றி நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By Parthipan K

பன்னீர்செல்வத்தை பற்றி நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தமிழகத்தில் மேலும் 2034 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனாபாதிப்பால் சென்னையிலுள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் அவர் விரைவில் உடல் நலம் முழுமையாக குணமடைய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் விரைவில் முழுமையாக உடல் நலம் பெற விளைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாகவும் அவரை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியதாக பொதுக்குழுவில் கூறப்பட்டது. இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் தான் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருப்பது அவ்வரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது.

எதிர்க்கட்சியான ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். ஆனால் தன் கட்சியிலே இருந்த எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த பிக்பாஸ் பிரபலம்தான் சூர்யா- சிவா படத்தின் நாயகியா? வெளியான தகவல்!

கள்ளக்குறிச்சி போராட்டம் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!  நீதிபதியின் உத்தரவு!

Leave a Comment