டெல்லியில் தேசிய கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.!
நாட்டின் தலைநகரான டெல்லியில் சமுக நீதி மாநாடு என்ற பெயரில் அணைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் உள்ள மராட்டிய அரசின் இல்லத்தில் நடைபெற்றது.
முற்றிலும் புதுமையான முறையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும் என பல மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், உள்ளிட்ட நாட்டின் 19 முக்கிய கட்சிகள் பங்கேற்றன.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதவர்கள் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். இதில் தலைமை உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் சமுக நீதி போராட்டம் என்பது ஒரு சில மாநிலங்ள் மட்டுமே போராடுகின்ற பிரச்சினை அல்ல அணைத்து மாநிலங்களின் பிரச்சினை ஆகும்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல சாதி மற்றும் பிரிவுகள் என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாமே ஒழிய பிரச்சினை என்பது ஒன்றுதான். சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை அதே சாதியை வைத்து உயர்த்துவது தான் இட ஒதுக்கீடு என்பதன் பொருள். பொருளாதார ரீதியாக வஞ்சத்தை சேர்திருக்கிறது மத்திய பாஜக அரசு, ஏழைகள் நாட்டின் திடிரென பணக்காரர்கள் ஆகலாம், பணம் இருப்பதையும் மறைக்கலாம் ஆனால் சரியான அளவுகோலில் உள்ள சமநிலை அல்ல.
ஏழைகளில் உயர்சாதி ஏழைகள் என பாஜக அரசு பிரித்து வைத்திருக்கிறது. ஏழைகள் என்றால் அணைவருமே ஏழைகள் தான் இதில் எதற்காக பிரிவினை, பாஜகாவிற்கு வாக்கு அளிப்பவர்கள் மற்றும் வாக்கு அளிக்காதவர்கள் என பாஜக அரசு ஏழைகளை பிரித்து வைத்துள்ளது. இங்கு சமுக நீதியை அவர்கள் கொலை செய்துள்ளதாகவே கருத தோன்றுகிறது.
நாடுமுழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்களை மத்திய அரசு அதிகார பூர்வமாக அறிவிக்க வேண்டும். சமூக நீதி மற்றும் சமதர்ம சகோதரத்துவத்தை உருவாக்க நாம் அணைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என சமூக நீதி மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த சமூக நீதி மாநாடு தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அகில இந்திய கூட்டணிக்கான அச்சாரமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய பாஜக அரசிற்கு எதிராக அணைத்து எதிர் கட்சிகளையும் ஸ்டாலின் ஒன்றினைத்து வைத்திருப்பது தேசிய அரசியலில் அவரின் அடுத்த கட்ட நகர்வுகளை எடுத்து காட்டுவது போல் உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.