பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Photo of author

By Vijay

அகில இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடுங்கள், என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம் மூலம் வலியுறுத்தல்.

திருத்தம் செய்ய உள்ள முடிவு இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது.

நிர்வாக கூட்டமைப்பின் தன்மை, பணியாற்றும் செயல்திறனை பாதிக்கும் வகையில் உள்ளது.

75 ஆண்டுகளாக கவனமாக உருவாக்கப்பட்ட தேசத்தின் சித்தாந்தங்களை வலுவிழக்க செய்யும் வகையில் உள்ளது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.