ஆஸ்கர் பட பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருகோடி பரிசு!!

0
191
#image_title

ஆஸ்கர் பட பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருகோடி பரிசு!!

உலகம் முழுவதும் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான உயரிய விருதாக அனைவராலும் கருதப்படும் விருதுதான் ஆஸ்கார் விருது, இந்த விருதினை வாங்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல, நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் இசை அமைப்பாளர் என பல்வேறு தரப்புகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படும் போது, இந்திய மொழி திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், முதன் முதலில் ஆஸ்கார் விருது வாங்கி நாட்டிற்கே பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

அதன் பின் பல இந்திய திரைப்படங்கள் ஆஸ்கார் போட்டிக்கு சென்றாலும் கூட , எந்த திரைப்படமும் விருதினை வென்றதில்லை என்ற கவலையை கடந்த வருடம் வெளியான இரண்டு இந்திய திரைப்படங்கள் சாதித்து காட்டின.

கடந்த வருடம் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம்,மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் கடந்த 2019 ம் ஆண்டு முதல் பொம்மி மற்றும் ரகு என்ற யானைகளை பெல்லி, பொம்மன் என்ற யானை பராமரிப்பாளர்கள் பற்றிய தி எலிபன்ட் விஷ்பரர்ஸ் என்ற இந்த இரு இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

இதனிடையே ஆஸ்கார் விருது வென்ற பொம்மன் மற்றும் அவரது மனைவியான பெல்லி ஆகியோரை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார், இதனை தொடர்ந்து திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகி கொன்சால்வஷ் நேற்று முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இதனை பெற்று கொண்ட இயக்குனர் கார்த்திகி முதல்வர் தன்னை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழும் பரிசு தொகையும் வழங்கி தனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

Previous articleவேலையில்லா இளைஞர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! மாதந்தோறும் உதவித்தொகை!
Next articleநடிகர் விஜய் பற்றிய கேள்விக்கு லவ்வுன்னு பதிலளித்த ராஷ்மிகா!! ரசிகர்கள் உற்சாகம்!