முதல்வர் ஸ்டாலின் சேலம் வருகை! 28 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்!
முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல நலத்திட்ட உதவிகளை அமல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 55 ஆயிரம் பயனாளிகளுக்கு பயன்தரும் வகையில் அத்திட்டம் செயல்பட்டு வருகிறது.அதனையடுத்து கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று சேலத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.இத்திட்டத்தின் மூலம் 16 சிறப்பு துறைகளை உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டிற்கும் 1200க்கும் மேல் முகாம்கள் அமைத்து மக்களுக்கு பயன்தரும் வகையில் செயல்படுத்துவதாக கூறியுள்ளனர்.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சேலம் வருகிறார்.மேலும் திமுக கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்க உள்ளதாக கூறியுள்ளனர். அதனையடுத்து முதல்வர் அவர்கள் சேலம் வாழப்பாடி செல்ல உள்ளார்.அங்குள்ள அரசு பள்ளியில் விழா ஒன்றில் கலந்து கொண்டு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மருத்துவ முகாமை தொடங்கி வைக்க இருக்கிறார்.அந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததும் ஆத்தூரில் போக்குவரத்து துறையின் சார்பில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
அதனையடுத்து 28 கோடியே 99 லட்ச மதிப்பிலான உழவர் நலத்துறை ,மக்கள் நல்வாழ்வுத் துறை ,வருவாய் துறை, பள்ளிக் கல்வித் துறை ,உள்ளிட்ட துறைகள் கூடிய இருபத்தி எட்டு முடிவுற்ற திட்டப்பணிகளை அந்த போக்குவரத்து அலுவலக வளாகத்திலேயே திறந்து வைக்கிறார்.அதனையடுத்து 23 கோடியே 28 லட்சம் மதிப்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, போக்குவரத்துத் துறை ,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை போன்ற 13 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் ஆத்தூரில் உள்ள தனியார் தொழில் நிறுவனமான ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியை பார்வையிடுகிறார்.அதனையடுத்து மரவள்ளி விவசாயிகள் ஜவ்வரிசி உற்பத்தி நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் உரையாடல் நடத்த உள்ளார்.மேலும் இன்று மாலை 4 மணி அளவில் கருப்பூர் சிட்கோ மகளிர் தொழில் பூங்காவில் குழு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடனும் உரையாடல் நடத்த உள்ளார்.மேலும் நாளை தர்மபுரிக்கு சென்று பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.