மழை வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்காக இன்று தூத்துக்குடி வரும் முதலமைச்சர்!

Photo of author

By Sakthi

மழை வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்காக இன்று தூத்துக்குடி வரும் முதலமைச்சர்!

Sakthi

தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக, பெரும்பாலான வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது இதன் காரணமாக, பொது மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தருகிறார் என்று சொல்லப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் மதியம் 12 20 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்படுகிறார்,, மதியம் 1 50 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்தை சென்றடைய இருக்கிறார், இதனை தொடர்ந்து தூத்துக்குடி பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர், ரஹ்மத் நகர், உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிப்படைந்து இருக்கின்ற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

அதோடு தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் இருக்கின்ற திருமண மண்டபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இருக்கிறார். அதன்பிறகு காரின் மூலமாக மதுரைக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அதோடு தூத்துக்குடிக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.