டெல்டா மாவட்ட வன்னியர்களை ஏமாற்றிய முதலமைச்சர்!

0
103
MK Stalin
MK Stalin

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போடப்பட்ட ஓட்டுக்கள் கடந்த 2ஆம் தேதி எண்ணப்பட்டது. அதன்படி தமிழகத்தில் திமுக சுமார் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அந்த கட்சி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சுமார் 159 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தனித்து 66 இடங்களிலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 76 இடங்களிலும் வெற்றி பெற்று வலிமையான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறது.

ஆனால் தமிழகத்தில் பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும் கூட வாக்கு சதவீதம் சொற்ப அளவிலேயே இருந்து வருகிறது. அதாவது பல இடங்களில் 100 வாக்குகள் 200 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 5 வாக்குகள் 6 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.


பல தொகுதிகளில் இறுதிவரையில் அதிமுக கடுமையான போட்டி கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெற்றி பெறுவாரா அல்லது பெற மாட்டாரா என்ற பயம் அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு இறுதிவரையில் இருந்து வந்தது கடைசியாக அவர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே அதிமுக வேட்பாளரை வீழ்த்தி இருந்தார்.

இதேபோல பல இடங்களிலும் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் தமிழகம் முழுவதுமே மொத்தமாக 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக திமுகவிடம் தன்னுடைய ஆட்சியை இழந்து இருக்கிறது.இதில் வேடிக்கை என்னவென்றால் கொங்கு மண்டலம் மற்றும் கோயமுத்தூர் பகுதிகளில் எப்படியாவது இந்த முறை காலூன்றி விடவேண்டும் என்று ஸ்டாலின் உள்பட திமுகவின் முக்கிய புள்ளிகள் தீவிரமாக முயற்சி செய்தார்கள். ஆனால் கோயம்புத்தூர் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு தொகுதியில் கூட திமுக கால் ஊன்ற முடியவில்லை.

அதேபோல டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், மேட்டூர் போன்ற பகுதிகளில் திமுக மிக பலமாக இந்தமுறை அமர்ந்திருக்கிறது. அதற்கு காரணம் இந்த முறை எப்படியாவது அமைச்சர் பதவி வாங்கிவிட வேண்டும் என்று திமுகவில் இருக்கக்கூடிய வன்னியர் இன தலைவர்கள் எடுத்த முயற்சியின் காரணம் தான் இந்த வெற்றிக்கு அடித்தளம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் தஞ்சாவூர் பகுதி சார்ந்த திமுக தலைவர்களின் எண்ணம் ஸ்டாலினிடம் ஈடேறவில்லை அவருடைய அமைச்சரவை பட்டியலில் 3 வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள் தான் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் டெல்டா மாவட்டத்தில் ஒருவர் கூட இல்லை என்பது தான் பரிதாபம்.

Previous article#BREAKING NEWS தமிழகத்தில் முழு ஊரடங்கு மாநில அரசின் அதிரடி உத்தரவு!! டாஸ்மாக்குகளை முடக்கிய ஸ்டாலின்!!
Next articleசொன்னதை செய்த ஸ்டாலின்!அதிரடி உத்தரவு!