சொன்னதை செய்த ஸ்டாலின்!அதிரடி உத்தரவு!

0
62

நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் நேற்றைய தினம் பதவியேற்றவுடன் காலை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த ஸ்டாலின், அவரை முதல்வராக தேர்ந்தெடுத்திருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி கூறும் விதத்தில் அவர் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த 5 வாக்குறுதி அரசாணைகளை பிறப்பித்திருக்கிறார். அந்த அரசாணைகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு பொது மக்களுக்கு உதவும் விதத்திலும், இருப்பதாக கூறுகிறார்கள்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக மே மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும், அதேபோல ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். பொதுமக்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை உருவாக்கிய அதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்ய ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார்.

அதிலும் குறிப்பாக தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டிருக்கும் அறிவிப்புகளை செயல்படுத்தும் விதத்தில் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் இருக்கின்ற அரசுப் போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சாதாரண கர்த்தனே நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து விதமான பெண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை எதுவும் இல்லாமல் இன்று முதல் பயணம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில், இன்று முதல் அனைத்து நகர்ப்புற சாதாரண பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.