அணை கட்டுவது உறுதி முதல்வர் அதிரடி அறிவிப்பு!! அதிர்ச்சியில் மாநில மக்கள்!!
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. மேலும் கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து அவர் கர்நாடக மாநில நிதியமைச்சராகவும் உள்ளார். இந்த நிதியாண்டிற்காக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது.
அதனையடுத்து இவர் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக இன்று மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் இந்த பட்ஜெட்டில் பல முக்கிய திட்டமங்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேகதாது அணை திட்டம் பெங்களூர் மக்களின் குடிநீர் மற்றும் மின் உற்பத்தியை அதிகப்படுத்த உதவுகிறது. முதலில் அவர் மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் மேகதாது அணை கட்டுவதற்கான தேவையான பட்ஜெட்டை தற்போது அறிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த திட்டம் பற்றிய அறிக்கை மற்றும் சுற்றுச்சுழல் தாக்கம் குறித்து மதிப்பீடுகள் ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அணை கட்டுவதற்கு அனுமதி பெறுவோம் என்றும், அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அறிவித்துள்ளார். இதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் மட்டுமின்றி பல கட்சி தலைவர்களும் கண்டம் தெரிவித்து வருகிறார்கள்.