முதல்வரின் அதிரடி உத்தரவு.. அவையை விட்டு வெளியேறிய ஆளுநர்!! இது எதுவும் இங்கு செல்லுபடி ஆகாது!
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது ஆளுநரின் போக்கை முதல்வர் விமர்சித்ததால் திடீரென்று கூட்டத்திலிருந்து ஆளுநர் வெளியேறியது தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
முதலில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று ஓ பன்னீர் செல்வத்திற்கு இடம் ஒதுக்கி கொடுத்ததை கண்டித்து ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இதனை அடுத்து ஆளுநர் பேசத் தொடங்கியதும், ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் இணைந்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனை அடுத்து ஆளுநர் அவருக்கு கொடுக்கப்பட்ட உரையை படிக்க ஆரம்பித்தார். அவ்வாறு படித்ததில் அதில் குறிப்பிட்டுள்ளதை பற்றி கூறாமல் இவர் தனது உரையில் தானாக சிலவற்றை பேசியதாலும் திராவிட மாடல் என்பது பற்றி கூறியிருப்பதை முற்றிலும் தவிர்த்து அடுத்தடுத்த பக்கத்தில் உள்ளது படித்ததால் சர்ச்சை கிளம்பியது.
இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் அரசு கூறிய பதிவை எதுவும் ஆளுநர் செயல்படுத்தவில்லை என்றும் அவருக்கு அரசு சார்பாக வழங்கப்பட்ட குறிப்பை எதுவும் முறையாக ஆளுநர் படிக்கவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே உடனடியாக பேரவையை விட்டு ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.
இது தற்பொழுது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ஆளுநர் அரசு அளித்த பதிவில் குறிப்பிடப்படாத எதுவும் பதிவேற்றக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.