முதல்வரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!!மொத்த குடும்பமும் பரிதவிப்பு!!

Photo of author

By Gayathri

முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் சகோதரரும் நடிகர் அருள்நிதி இன் தந்தையுமான முக தமிழரசு அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வரான கருணாநிதியின் உடைய மற்றொரு மகன் மூக்கா தமிழரசு அவர்கள் திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்றாலும் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட மத்திய சென்னையில் போட்டியிட்ட தயாநிதி மாறன் அவர்களுக்காகவும் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

அரசியல் மற்றும் பதவி மீது அதிக அளவில் நாட்டம் இல்லாத முக தமிழரசு அவர்கள் தமிழ் திரைப்படத்தில் டிமான்டி காலனி வம்சம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த திரு மு க தமிழரசு அவர்களுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்படவே அமைந்த கரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவருடைய குடும்பத்தினர் சிகிச்சைக்காக முக தமிழரசு அவர்களை அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் முக தமிழரசு அவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அவருடைய உடல்நிலை எவ்வாறு இருக்கிறது ? அவருக்கு என்ன பிரச்சனை என்பதை தற்போது வரை வெளியில் கூறவில்லை.எனினும் தன்னுடைய சகோதரரின் உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேரில் சென்றிருக்கிறார்.