5 வயது சிறுமியை கழிவறைக்கு அழைத்து சென்ற இளைஞர்; போக்சோ சட்டத்தில் கைது

0
247

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலில் தொல்லை கொடுத்த காமுகன் கைது செய்யப்பட்டான்.

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்ற 30 வயது இளைஞர் நேற்று முன்தினம், சிறுமியுடன் விளையாடுவது போல் அழைத்துள்ளார்.

இளைஞரின் வார்த்தையை நம்பி குழந்தையும் விளையாட்டாக சென்றபோது, சிறுமியை கழிவறைக்கு அழைத்துச் சென்ற இளைஞன் பாலியல் வல்லுறவு செய்ய முயன்றுள்ளான். உடலில் வலியோடு வீட்டுக்கு சென்ற சிறுமி நேற்று காலை பிறப்புறுப்பில் வலிப்பதாக தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சந்தேகத்துடன் சிறுமியின் தாய் கேட்டபோது, உதயகுமாரின் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை உதயகுமாரை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து, தாம்பரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Previous articleஇதயத்தில் ஈரம் இருந்தால் மின்கட்டண சலுகைகளை மக்களுக்கு வழங்க வேண்டும்; -முதல்வருக்கு ஸ்டாலின் அறிக்கை
Next articleஅசாமில் பெருவெள்ளம்! அச்சத்தில் பொதுமக்கள்! உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here