கோயில் பக்கமாக அழைத்து சென்று 7 வயது சிறுமி கொலை; புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்

Photo of author

By Jayachandiran

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 31 ஆம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறை விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் ஏம்பல் பகுதியில் உள்ள கிளவி தம்மம் குளத்திற்கு அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைஅறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். சிறுமியில் உடலில் பலத்த காயங்கள் இருந்ததை அடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மோப்ப நாயை கொண்டு ஆய்வு செய்கையில், சம்பவ இடத்திலிருந்து ஓடி ஒரு வீட்டிற்குள் நாய் படுத்துக்கொண்டது. இதனால் அந்த வீட்டில் வைத்து சிறுமியை கற்பழித்து கொலை செய்து உடலை வீசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் துப்பு கொடுத்தனர்.

சிறுமியை கறம்பவயல் காளிகோயில் வழியாக ஒரு வாலிபர் அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த வாலிபர் மற்றும் இன்னொரு இளைஞரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.