குழந்தைகள் விரும்பி சாப்பிடும்!!..அவல் பிரியாணி உங்களுக்கு செய்ய தெரியவில்லையா வாங்க கத்துக்கலாம்!.. 

0
167

குழந்தைகள் விரும்பி சாப்பிடும்!!..அவல் பிரியாணி உங்களுக்கு செய்ய தெரியவில்லையா வாங்க கத்துக்கலாம்!..

 

அவல் பிரியாணி செய்ய தேவை படும் பொருட்கள் இவைகள் தான்.தேவையான பொருள்கள்; கெட்டி அவல் – 2 கப், வெங்காயம் – ஒன்று , தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, காரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர், உருளை – ஒரு கப், மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி, தனியா தூள் – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி, கரம் மசாலா தூள் – கால் தேக்கரண்டி, இஞ்சி – ஒரு அங்குல துண்டு, பூண்டு – 4 பல், சோம்பு, பட்டை, இலவங்கம் – தாளிக்க, எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி, எண்ணெய் – 3 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து.

 

வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்,செய்முறை ; காய்கறிகளை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.அவலை களைந்து நன்கு கழுவி அரை கப் தண்ணீர், தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து பிசறி ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, இலவங்கம் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.அதனுடன் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.பிறகு எல்லா பொடிகளையும் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.அதில் அரிந்து வைத்துள்ள புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.பிறகு வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளற வேண்டும். காய்கறிகள் மீது மசாலா நன்கு பரவும் வரை வதக்கவும்.பின்பு அவல் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கினால் சுவையான அவல் பிரியாணி ரெடி.

Previous articleதினம் ஒரு திருத்தலம்… வற்றாத ஊற்று… சகஸ்ர லிங்கம்..!!அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்…!!
Next articleஅச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?..