குழந்தைகள் நன்றாக படிக்க.. படித்தது நியாபகத்தில் இருக்க மற்றும் நல்ல மதிப்பெண் பெற எளிய பரிகாரம்!!
ஒரு நல்ல வெற்றிலை வாங்கி கழுவி வைக்கவும். அடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் குங்குமம் சிறிது எடுத்து பன்னீர் சேர்த்து கலந்து விடவும். அடுத்து பச்சைக் கற்பூரம் சிறிதளவு சேர்த்து குங்குமப் பிள்ளையார் பிடித்து கொள்ளவும்.
அதற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து கொள்ளவும். இதை சுத்தம் செய்து வைத்துள்ள வெற்றிலையின் மீது வைக்கவும்.
அடுத்து அதற்கு பூ வைத்து ஒரு தட்டில் இட்டு பூஜை அறையில் வைத்து மனதார குழந்தைகளின் படிப்பிற்காக வேண்டிக் கொண்டு தூப தீபம் காட்டி வழிபடவும். அடுத்து இரண்டு வாழைப்பழங்களை நைவேத்தியமாக வைத்து பிள்ளைகளுக்கு சாப்பிடக் கொடுக்கவும்.
இதை அஷ்டமி, பிரதமை இல்லாத செவ்வாய்க் கிழமை அன்று ஆரமித்து தினமும் இந்த பிள்ளையாருக்கு இதே போல் தூப தீபம் காட்டி வழிபடவும். இதை 7 நாட்களுக்கு செய்ய வேண்டும். அதாவது மறு திங்கட்கிழமை வரை.
செய்து முடித்து 7வது நாள் மாலை 4 மணி அளவில் இதைக் கரைத்து செடியில் ஊற்றி விடவும். அல்லது கால் படாத இடத்தில் ஊற்றவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளின் படிப்பில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும். பூஜை சமாச்சாரம் அவ்வளவு தான். இதற்குப் பிறகு எளிதான விஷயம் 2 செய்ய வேண்டும்.
குழந்தைகளின் புத்த பையில் ஒரு மீடியம் சைஸ் பச்சைக் கற்பூரம் மற்றும் ஒரு மையிலிறகு போட்டு வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கும்.
3 மாதத்திற்கு ஒருமுறை பச்சை கற்பூரத்தை மட்டும் மாற்றி பழையதை வெளியில் போடவும். மைலிறகு ஆண்டிற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.
ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் வீட்டில் லக்ஷ்மி ஹயக்ரீவர் படத்திற்கு ஏலக்காய் மாலை போடவும். இந்த படம் இல்லாதவர்கள் பெருமாள் படத்திற்கே போடலாம்.
மாதத்திற்கு ஒருமுறை லக்ஷ்மி ஹயக்ரீவர் சன்னதிக்கு சென்று ஏலக்காய் மாலை போட்டு வரவும். முடியாதவர்கள் பெருமாள் கோயிலுக்கு சென்று போடவும்.
ஏலக்காய் எண்ணிக்கை வசதிக்கு ஏற்ப குறைந்தது 11 அல்லது 27 அதிகபட்சம் 108 என்று இருக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஒரே மாதத்தில் குழந்தைகளின் படிப்பில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.