கல்வி கற்க வசதி இல்லை என்பதால் கூலிக்கு வேலைக்கு செல்லும் குழந்தைகள்!

0
150

கல்வி கற்க வசதி இல்லை என்பதால் கூலிக்கு வேலைக்கு செல்லும் குழந்தைகள்!

ஆன்லைன் மூலம் கல்வி கற்க இயலாத குழந்தைகளை, பெற்றோர் தினசரி கூலி வேலைக்கு அனுப்பும் அவலம் ஆரன்கேரிவருகிறது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்றவற்றை தேவைப்படுகிறது .ஆனால், வாங்க வசதி இல்லாத குழந்தைகளின் நிலை தற்பொழுது வரை பரிதாபமாகவே இருக்கின்றன.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், ஆன்லைன் கல்வி கற்க முடியாமல் தவித்து வருகின்றனர். பெரும்பாலானோர் ஏழை எளிய மக்கள் என்பதால் அவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்துதான் பிழைத்து வரும் நிலையில் இருக்கின்றனர். இதனால் ஆண்ட்ராய்டு செல்போன் டிவி ,இணையதள வசதி கூட இல்லாத நிலையில் தற்போது வரை அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை கூலி வேலைக்கு அனுப்பி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிர்வாரா, தேவதுர்கா, காவிதாலா போன்ற பகுதிகளில் ஆன்லைன் கல்வி கற்க முடியாததால் மாணவ-மாணவிகளை பெற்றோர்கள், செங்கல் சூளைக்கும், கூலி வேலைக்கும் அனுப்பி வருகின்றனர். இதனால் அந்த மாணவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இது குறித்து தெரிய வந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ,ஆன்லைனில் கல்வி கற்க முடியாமல் வேலைக்கு செல்லும் மாணவ-மாணவிகளை தேடிப்பிடித்து கல்வி கற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous articleதிமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறிய ஆற்காடு வீராசாமியால் பரபரப்பு! வெளியேறியதற்கான காரணம் இதுதான்
Next articleமக்களே உஷார்:! மீறினால் 5000 ரூபாய் அபராதம்!