சிறுவர்களின் சவகாசம் பெரும் மோசம் ! ஆறு பேர் கைது!

0
189
Children's death is very bad! Six arrested!
Children's death is very bad! Six arrested!

சிறுவர்களின் சவகாசம் பெரும் மோசம் ! ஆறு பேர் கைது!

மதுரை மாவட்டம்  எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரய்யா. இவருடைய மகன் பிரகாஷ் (21) இவர் பழங்காநத்தம் பகுதியில் இருக்கக்கூடிய ஆட்டோ ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் அதேபகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் பிரகாஷ் சிறுவர்களை  கடுமையாக தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. அதனையடுத்து பிரகாஷ் அவரத்தின் வீட்டின்  வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 6 சிறுவர்கள் பிரகாசை  சரமாரியாக வெட்டி விட்டுஅங்கிருந்து  தப்பி  சென்றனர்.இதனைதொடர்ந்து பிரகாஷின் தந்தையார் வீரய்யா போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறு சிறுவர்களையும் கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஇந்த பாகிஸ்தான் வீரர் மட்டும் ஐபிஎல் ஏலத்துல இருந்தா… அஸ்வின் சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா?
Next articleகிளாமர் ரூட்டுக்கு திரும்பும் பிரேமம் பட நாயகி… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்