கிளாமர் ரூட்டுக்கு திரும்பும் பிரேமம் பட நாயகி… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

0
119

கிளாமர் ரூட்டுக்கு திரும்பும் பிரேமம் பட நாயகி… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மடோன்னா செபாஸ்டியன் அதன் பின்னர் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்தார்.

2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படம் மலையாள திரைப்படமாக இருந்தாலும் கூட சென்னையில் இந்த திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தென்னிந்திய சினிமாவில் ஒரு ட்ர்னட் செட்டிங் படமாக இந்த திரைப்படம் அமைந்துவிட்டது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.

படத்தின் மூன்று கதாநாயகிகளில் ஒருவர் மடோன்னா செபாஸ்டியன். படத்தில் அவர் நடித்திருந்த செலின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து அந்த மொழி ரசிகர்களுக்கும் அவர் பரிச்சயமானவர் ஆனார்.

இதையடுத்து அவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்டோரோடு காதலும் கடந்து போகும், பவர் பாண்டி, கவன் மற்றும் வானம் கொட்டட்டும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அந்த படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் உச்சத்துக்கு செல்ல முடியவில்லை. இதனால் மீண்டும் அவர் மலையாள சினிமா பக்கம் கவனத்தை செலுத்தினார். அங்கும் இப்போது முன்புபோல சரியான வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஹோம்லியாக நடித்து வந்த அவர் இப்போது கவர்ச்சி ரூட்டுக்கு யுடர்ன் அடித்துள்ளார்.

இதையடுத்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அவர் தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.