சீன நாட்டு மக்கள் அனைத்து நாடுகளுக்கும் சுற்றுபயணம்! கொரோனா தொற்று வைரஸை பரப்ப சதி!
முதன் முதலில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடனா சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவு உயிரிழப்பு விகிதம் இருந்தது.அதன் காரணமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தது.சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி என்ற பெயரில் உள்நாட்டு மக்களுக்கு பிறப்பிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பாஸ்போர்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.அதனால் சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளது.அந்தவகையில் நேற்று சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த பெண் மற்றும் அவருடை குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அவர்கள் இருவரும் வீட்டில் 15 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றது.மேலும் அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை கிராமம், கருப்பக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி ஒருவர் கடந்த 13 ஆண்டுகளாக சீனாவில் ஜவுளி தொழில் செய்து வருகின்றார்.
தற்போது சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து உயிரிழப்பு விகிதம் அதிகரித்து வருவதினால் அவர் அவருடைய குடும்பத்தினருடன் கடந்த 27 ஆம் தேதி சீனாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த பரிசோதனையின் முடிவில் ஜவுளி வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் வரும் ஜனவரி 8 ஆம் தேதி முதல் கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட உள்ளனர்.மீண்டும் பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி ஜனவரி மாதம் 8 ஆம் தேதி தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
அதன் மூலம் சீன நாட்டு மக்கள் ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது.அவர்கள் இவ்வாறு சுற்று பயணம் மேற்கொண்டால் சீனாவில் இருந்து பிற நாடுகளில் கொரோனாவை பரப்பும் ஆபத்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.