குழந்தைகள் புகைப்படத்தில் வைரமுத்து பற்றி கமெண்ட் போட்ட நபர்… உச்சகட்ட கோபத்தில் சின்மயி!

Photo of author

By Vinoth

குழந்தைகள் புகைப்படத்தில் வைரமுத்து பற்றி கமெண்ட் போட்ட நபர்… உச்சகட்ட கோபத்தில் சின்மயி!

பாடகி மற்றும் பின்னணி குரல் கலைஞர் சின்மயி சமீபத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார்.

பிரபல பாடகியான சின்மயி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து எனக்கும் உனக்கும் ,பாய்ஸ், அறிந்தும் அறியாமலும் ,சண்டைக்கோழி, சிவாஜி, எந்திரன், வின்னைத்தாண்டி வருவாயா என தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். மேலும் சமந்தா, திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு எட்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. இப்போது  சின்மயிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இரட்டை குழந்தைகள் பிறந்தன.

சமீபத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் ஒரு நபர் வந்து “வைரமுத்துவுக்கு வாழ்த்துகள்” என்று ஆபாசமாக கமெண்ட் பதிவு செய்த சின்மயி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “இதனால்தான் நான் என்னுடைய கர்பகால புகைப்படங்களைக் கூட பதிவிடாமல் இருந்தேன். இப்போது என்னிடம் தவறாக நடந்து கொண்டவரையே எனது குழந்தைகளுக்கு தகப்பன் ஆக்கிவிட்டார்கள். நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்கதான். ரத்தத்துலயே ஊர்னது. வளர்ப்பும் அப்படிதான்” எனத் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் மீ டு பிரச்சனை பூதாகாரமாக வெளியான போது பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது குற்றம் சாட்டி பரபரப்பைக் கிளப்பினார். அதன் பின்னர் பலருடைய மீ டு அனுபவங்களையும் அவர் வெளியிட்டார்.