பாடகி சின்மயி பெண்களுக்கெதிராக நடக்கும் விஷயங்கள் என்பது மட்டுமின்றி பல விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா, கவிஞர் வைரமுத்துவை சந்தித்ததற்கு சின்மயி தனது கருத்தை தெரிவித்து பரபரப்பாக்கினார். இந்நிலையில் நயன்தாராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார், நயன்தாராவிற்கு ஆதரவாக இவர் பேசியிருப்பது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரத்திலும் அவருக்கு ஆதரவாக சின்மயி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 22ம் தேதியன்று நயன்தாரா நடித்திருந்த கனெக்ட் படம் திரையரங்குகளில் வெளியாகி னால வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை நயந்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் சிறப்பு காட்சியை காண நடிகை நயன்தாரா தனது கணவருடன் வந்திருந்தார், அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. நயன்தாராவின் மார்பகங்கள், அவரது கணவனுடனான உறவு குறித்து பலரும் மோசமாக கமெண்ட் செய்திருந்தனர்.
இதனை கண்டு ஆத்திரமடைந்த சின்மயி அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார், அவர் கூறுகையில் இந்த கமெண்ட்ஸில் நிறைய வக்கிரம் உள்ளது, கமெண்ட்ஸ் மாடரேட் பண்ணாதது நல்லாத்தான் இருக்கு அப்போதான் ஆபத்தானவங்க யாருனு நமக்கு தெரியுது. உண்மையாவே இந்த ஆண்கள் எல்லாம் தாய்ப்பால் குடிச்சாங்களா இல்லையா? இவங்களுக்கெல்லாம் பெண் குழந்தை இருந்தா என்னாகுமோனு யோசிக்கிறேன். தனது மகன் மற்றும் கணவன் முன்னிலையிலும் தனது மகள் துப்பட்டா போட்டிருக்க வேண்டும் என்று சில தாய்மார்கள் நினைக்கின்றனர். ஒருவேளை அவர்களால் தனது உணர்ச்சிகளை அடக்கமுடியாது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்குமோ என்று கடுமையாக சாடியுள்ளார்.