எஸ்பிஐ-ன் அதிரடி திட்டம்: இனி குழந்தைகளின் படிப்பு முதல் திருமணம் வரையுள்ள செலவுகள் இலவசம்!

0
163

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் பலரும் தவித்து வருகின்றனர், இது சாமானியனின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் படிப்பு முதல் உணவு பொருட்கள் வரை அனைத்து விதமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்து விட்டது. பணவீக்கத்தால் தங்களது அன்றாட வேலைகளை செய்யவே மக்களுக்கு சிரமமாக இருக்கும் நிலையில் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி செலவை சமாளிப்பது சாமானிய மக்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்குவது பெரும் சவாலாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் எஸ்பிஐ வங்கி உங்களுக்காக மிகப்பெரிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இனிமேல் நீங்கள் குழந்தைகளின் கல்வி நலன் குறித்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை.SBI Children FD: मुलांचे भविष्य सुरक्षित करण्यासाठी एसबीआयमध्ये उघडा हे खास  एफडी खातं

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தில் உங்கள் குழந்தைகளின் கல்வி முதல் அவர்களின் திருமணம் வரையிலான செலவுகளை எவ்வித கவலையும் இல்லாமல் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் பெயர் எஸ்பிஐ சைல்டு பிளான் ஃபிக்ஸட் டெபாசிட் ஆகும், இதன் கீழ் இரண்டு திட்டங்கள் வழங்கப்படுகிறது. முதல் திட்டம் எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் சேம்ப் இன்சூரன்ஸ் மற்றும் இரண்டாவது திட்டம் எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் ஸ்காலர் ஆகும்.

1. எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் சேம்ப் இன்சூரன்ஸ்:

இந்த திட்டடத்தில் நீங்கள் ரூ.1 லட்சதந்தை முதலீடு செய்து ரூ.1 கோடியை பெறலாம், இதில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் நீங்கள் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்ய பெற்றோரின் வயது 21 முதல் 50 வயது வரை இருக்க வேண்டும் மற்றும் இதில் 0-13 வயதுக்குள் உள்ள குழந்தைகள் சேரலாம் . இத்திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும், குழந்தைக்கு 18 வயதாக இருக்கும் போது 4 வருடாந்திர தவணைகளில் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மேலும் இதில் உங்களுக்கு 105% வரை விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.SBI's Risk free Child Investment Plan; Get up to Rs 1 Crore upon Maturity

2. எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் ஸ்காலர்:

இது ஒரு தனிநபர், யூனிட் இணைப்பு, பங்கேற்காத ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும், இதில் முதலீடு செய்ய பெற்றோரின் வயது 18 முதல் 57 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் இதில் சேரும் குழந்தையின் வயது 0 முதல் 17 வயது வரை இருக்க வேண்டும். 8 முதல் 25 ஆண்டுகள் வரை நீங்கள் இதில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டமானது அவசர தேவைக்கு பணத்தை எடுப்பது, விபத்து காப்பீடு மற்றும் வரி சலுகை போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது.

author avatar
Savitha