லவ் பேர்ட்ஸ்.. போல ஒன்றாக சுற்றும் சாக்லேட் ஜோடிகள்!.. இவர்கள் தானா??
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் தமது இளம் பருவம் முதல் நடித்து வருபவர் சித்தார்த்.
அவரின் முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.இவர் தற்போது காதலில் சொதப்புவது எப்படி?, ஜிகிர்தண்டா, காவிய தலைவன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
இதைதொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பெரும்பான்மையாக நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படமே நல்ல வரவேற்பு பெற்று தந்தது. இந்நிலையில் சித்தார்த் கடைசியாக மஹா சமுத்திரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் சித்தாத்துக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடித்துள்ளார். படத்தில் ஜோடி போட்டு சுற்றியது போல் நிஜத்திலும் அவர்கள் இருவரும் ஜோடியாக தான் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். சாப்பிடும் இடங்கள் மட்டுமல்லாமல் பல பொழுதுபோக்கு இடங்களுக்கும் சென்று வருகின்றனர்.
இதனையடுத்து இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக நியூஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சலூன் ஒன்றிற்கு அவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அங்கு அவர்களை சுற்றி பத்திரிக்கையாளர் சில போட்டோக்களை எடுத்துள்ளார்கள்.இதனால் டென்ஷன் ஆகி போட்டோ எடுத்தவர்களை பார்த்து உரத்த குரலில் கத்தியுள்ளார். இதனால் போட்டோ எடுத்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த விஷயம் தற்போது வைரலாகி உள்ளதால் சித்தார்த் மற்றும் அதிதி குறித்த டேட்டிங் செய்தியும் வேகமாக பரவி வருகிறது. டேட்டிங்கில் இருவரும் கை கோரத்தப்படியே செல்கின்றனர். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்னாகவே தான் செல்வார்களாம். அதில் எடுத்த போட்டோ தான் இது சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.