இனிப்பு உணவுகள் என்றால் யார் தான் விரும்ப மாட்டார்கள்.இதில் சாக்லேட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் பேவரைட்டாக இருக்கின்றது.இதன் சுவையும் மணமும் பெரியவர்களை கூட குழந்தைகளாக்கிவிடுகிறது.
இந்த சாக்லேட் பவுடர் கொக்கோ என்ற பழத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.கொக்கோ விதைகளை நன்றாக காயவைத்து வறுத்து பொடிப்பதால் சாக்லேட் பவுடர் கிடைக்கிறது.இந்த பவுடரில் சர்க்கரை போன்ற பொருட்கள் கலந்து பல்வேறு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது.சாக்லேட் சாப்பிடுவதால் சில நன்மைகள் கிடைக்கிறது.
டார்க் சாக்லேட் பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.அதோபோல் பாலியல் ஆர்வத்தை தூண்டும் பொருளாக டார்க் சாக்லேட் இருக்கின்றது.இருப்பினும் சாக்லேட் அதிகமாக சாப்பிட்டால் நமக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பயங்கரமாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்:
1)இதில் இருக்கின்ற அதிக கலோரி உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையை அதிகரித்துவிடும்.
2)சாக்லேட்டில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு செரிமானப் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.வாயுக் கோளாறு,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் இதனால் ஏற்படலாம்.
3)அதிக இனிப்பு கொண்ட சாக்லேட்டை சாப்பிடுவதால் தலைவலி பிரச்சனை ஏற்படும்.இந்த பிரச்சனையை ஒரு சிலர் அனுபவிக்கலாம்.
4)அதிக இனிப்பு நிறைந்த சாக்லேட் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்.
5)சாக்லேட்டில் இருக்கின்ற கொழுப்பு முகப்பருக்கள் உருவாக காரணமாகிவிடும்.அதிகளவு சாக்லேட் சாப்பிட்டால் உடலில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும்.இதனால் எலும்பு சம்மந்தபட்ட பிரச்சனைகள் உருவாகும்.
6)அதிகமான சாக்லேட் சாப்பிட்டால் பல் சிதைவு,ஈறுகள் பலவீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.சாக்லேட்டில் இருக்கின்ற காஃபின் உடல் சோர்வை அதிகமாக்கும்.
7)சிலருக்கு சாக்லேட் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.சாக்லேட் அதிகமாக சாப்பிட்டால் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் அதிகம் ஏற்படும்.