தமிழகத்தில் இந்த பகுதிகளில் காலரா நோய் தொடர்ந்து அதிகரிப்பு! பீதியில் மக்கள்!
கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அதே போன்று பல்வேறு நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டு வருகிறது.
இதனையடுத்து காலரா, குரங்கம்மை போன்ற நோய்களும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் சிலருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தில் உள்ள காத்மாண்டு என்ற பகுதியில் 12 பேருக்கு காலரா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த தொற்றானது சுகாதாரமற்ற நீரில் உருவாகும் ஒரு வகை பாக்டீரியா தீநுண்மியால் உருவாவது தான் இந்த காலார நோய். இந்த நோய் தொற்று ஏற்பட்டால் கடும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.இதன் மூலம் உடம்பில் உள்ள நீர்ச்சத்து அனைத்தும் போகச் செய்யும். இந்த காலரா தொற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால் ஆரோக்கியமற்றவர்கள் மரணமடைய கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் நேபாளத்தில் பன்னிரண்டு பேருக்கு காலரா தொற்று உறுதியாகிய நிலையில் தற்போது காரைக்காலிலும் கலரா தொற்று சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது அதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. மேலும் தற்போது சுகாதாரப் பணியாளர் நேரில் சென்று மக்களை சந்தித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அனைவரும் அவர்களின் வீட்டு பக்கத்தில் ஏதேனும் கழிவு நீர் தேங்குகிறதா என கவனிக்க வேண்டும் என்றும்.மேலும் கொசுக்களின் எண்ணிக்கை பெருகாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த காலரா நோய் ஆனது வேகமாக பரவக்கூடியது என்பதால் வீட்டை தூய்மையாக வைத்திருக்கும் படியும், குளோரின் கலந்த நீரை பருகும்படியும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த நோயானது பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பதன் மூலம் தான் வேகமாக பரவுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார். இந்த காலரா நோயினால் ஏற்படும் வாந்தி ,வயிற்றுப்போக்கு போன்றவைக்கு மருத்துவமனைகளில் போதுமான மாத்திரைகள் இருக்கின்றதா என கவனிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.