இக்காலத்தில் உணவுமுறை பழக்கத்தால் பல்வேறு நோய் பாதிப்புகளை அனுபவிக்கும் சூழலில் இருக்கின்றோம்.முன்பெல்லாம் உணவு தான் மருந்து என்ற நிலை இருந்தது.ஆனால் காலங்கள் மாறி வரும் நிலையில் மருந்து இன்றி வாழ முடியாத நிலை உருவாகிவிட்டது.
உணவுக் கலாச்சாரம்,உட்கொள்ளும் விதத்தில் பெருமளவு மாற்றம் வந்துவிட்டது.எந்த நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையே நாம் மறந்து விட்டோம்.காலையில் உட்கொள்ள வேண்டிய உணவை மதிய நேரத்தில் எடுத்துக் கொள்கின்றோம்.
சிலர் காலை நேர உணவை மறந்து வருகின்றனர்.அதேபோல் லேட் நைட்டில் உண்பதை அனைவரும் வழக்கமாக்கி வருகின்றனர்.இரவு பணி செய்பவர்கள்,பேச்சுலர்ஸ் போன்றவர்கள் இரவு நேரத்தில் ஹோட்டல் உணவுகளை ஆர்டர் செய்து உட்கொள்கின்றனர்.
மேலும் மைதா,பதப்படுத்தப்பட்ட இறைச்சி,காரசாரமான உணவு,நார்ச்சத்து குறைந்த உணவுகள் செரிமானப் பிரச்சனைக்கு வழி வகுக்கிறது.உடலில் செரிமான அமைப்பு ஒழுங்காக இயங்கவில்லை என்றால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் எழத் தொடங்கும்.எனவே செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த சில புரோபயாட்டிக் உணவுகளை தேர்வு செய்து உட்கொள்ளுங்கள்.
புரோபயாட்டிக் உணவுகள்:
1)மோர்
2)தயிர்
3)ஊறுகாய்
4)பச்சை பட்டாணி
5)ஊறவைத்த அரிசி உணவுகள்
6)பன்னீர்
மோரில் அதிகளவு புரோபயாட்டிக் நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஒரு கிளாஸ் மோர் பருகி வந்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.மோரில் இருக்கின்ற நல்ல பாக்டீரியா குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இட்லி,தோசை போன்ற ஊறவைத்த அரிசியில் செய்யப்பட்ட உணவுகள் செரிமானத்தை எளிதாக்கும்.பால் பொருட்களான பன்னீரில் புரோபயாட்டிக் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதை சாப்பிட்டால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.
தயிரில் புரோபயாட்டிக் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதில் இருக்கின்ற நல்ல பாக்டீரியா குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.
நாம் உணவில் சைடிஷாக சேர்த்துக் கொள்ளும் ஊறுகாய் ஒரு புரோபயாட்டிக் உணவாகும்.பச்சை பட்டாணியில் புரோபயாட்டிக் அதிகளவு நிறைந்திருக்கிறது.இதுபோன்ற புரோபயாட்டிக் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.