இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த, சஞ்சீவ் எனும் 18 வயது இளைஞர் திருப்பூரில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வந்துள்ளார்.
இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சூளைமேட்டை, சேர்ந்த சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
பின் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த, நட்பு காதலாக மாறியுள்ளது.
சிறுமி மீது உள்ள காதலால். சஞ்சீவ் திருப்பூரில் இருந்து சென்னை வந்துள்ளார். காதலியை சந்திக்க வந்த சஞ்சீவ், காதலியின் தாயிடம் சிக்கி கொண்டுள்ளார்.
சிக்கிய சிறுவனை, சிறுமியின் தாய் போலீஸில் ஒப்படைத்துள்ளார். காவலர்கள் அந்த சிறுவனை, கெல்லிஸ் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.
தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த சிறுவன், மீண்டும் அந்த சிறுமியோடு தொடர்பில் இருந்துள்ளார். கடந்த 7-ம் தேதி பிறந்தநாளை காதலியோடு கொண்ட ஆசைக்கொண்ட சிறுவன், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அவனை சந்திக்க வருமாறு அழைத்துள்ளான்.
தானும் சந்திக்க வருகிறேன் என்று கூறியிருக்கிறாள் சிறுமி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறுவனை சந்தித்த சிறுமி, Maaza –வில் எலிமருந்து கலந்து கொடுத்திருக்கிறாள்.
இதனை அறியாத சஞ்சீவ், குளிர்பானத்தை குடித்து இருக்கிறார். பின் அந்த சிறுமி நீ குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு, உன் காதல் தொல்லையால் தான், நான் இப்படி செய்தேன். என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சிறுமி புறப்பட்டுவிட்டால்.
மயங்கிய நிலையில், உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளான், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் உறவினர்,
சிறுவனை மீட்டு கொல்லிமேடு அரசு மருத்துவமனையிலும், ஆவடி அரசு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்க அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸில் புகார் அளித்துள்ளனர். மேற்கொண்டு சிறுவனிடம் விசாரணை செய்யும் பொழுது,
காதலி தனக்கு விஷம் கொடுத்ததாகவும் அதனை அறியாமல் நான் குடித்துவிட்டேன், எனக்கு விஷம் கொடுத்ததாக அவளே என்னிடம் அதை சொன்னால்.
என்னை சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை நான் அறிவதற்குள், காதலியின் தாய் மற்றும் தங்கை என்னை தாக்கிவிட்டு, என் செல்போனை பிடிங்கி உடைத்து, அங்கிருந்து சென்று விட்டார்கள். என காவலரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
பின்னர் சிகிச்சை பலனின்றி சஞ்சீவ் உயிர் இழந்துள்ளார், இந்த மரண வாக்கு மூலத்தை வைத்து, அந்த சிறுமியையும், சிறுமியின் குடும்பத்தையும் காவலர்கள் விசாரித்துள்ளனர்.
இந்த விசாரணைக்கு பின்னரே, பல உண்மைகள் அம்பலமானது. சஞ்சீவ் தொடர்ந்து அந்த சிறுமிக்கு தொந்தரவு அளித்துள்ளான், பின் பிறந்தநாள் அன்று என்னை பார்க்க வரவில்லை என்றால், நான் உன்னை சும்மா விடமாட்டேன் என்று மிரட்டி உள்ளான்.
இதை பற்றி குடும்பத்தினரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார், பின் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில்,அவனே குளிர்பானம் வாங்கி அதில் விஷம் கலந்துள்ளான், சிறுமியின் தாய் அளித்த புகாரின் பெயரில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள CCTV காட்சியை பார்த்த பொழுது, சிறுவன் கடைக்கு சென்று வாங்கியதும், விஷம் கலந்ததும் உண்மையானது.
சிறுமி அவனை காதலிக்க மறுத்ததால், அவளை பழிவாங்க இவ்வாறு செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.