இசைத்தம்பதிக்கு பிறந்த இசைக் குழந்தை! மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி ஜோடி.!!
தமிழ் சினிமாதுறையில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என்று சினிமாவில் பன்முகம் கொண்டவர் ஜிவி.பிரகாஷ். தமிழகத்தில் மக்களுக்கு ஆதரவாக நடந்த சில போராட்டங்களிலும் சமூக அக்கறையுடன் கலந்துந்து கொண்டவர்.
மேலும் இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மானின் அக்கா மகனும் ஆவார்.
தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே தனது திரை இசையின் மூலம் மக்களை கவர்ந்தார். கிரீடம் படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இசைப்புயலின் இசையில் ஜென்டில்மேன் படத்தில் பாடகராகவும் முதல் தடம் பதித்தார். இதற்பிறகு சில படங்களில் நடிகராகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த இசைத்தம்பதிக்கு தி.நகரில் உள்ள மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் சினிமா பிரபலம் மற்றும் ரசிகர்கள் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.