திரெளபதி படத்தை வெளியிட கூடாது! பீதியில் சிறுத்தைகள் மனு..?

Photo of author

By Jayachandiran

திரெளபதி படத்தை வெளியிட கூடாது! பீதியில் சிறுத்தைகள் மனு..?

Jayachandiran

Updated on:

திரெளபதி படத்தை வெளியிட கூடாது! பீதியில் சிறுத்தைகள் மனு..?

சமீபத்தில் டிரெய்லர் மட்டும் வெளியிடப்பட்டு மக்களின் அமோக வரவேற்பை பெற்ற படம் திரெளபதி. நாடக காதல்களால் பாதிக்கப்பட்ட சம்பவங்களை வைத்து  ஆதாரத்துடன் எடுத்துள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரெளபதி படம் வெளியே வந்தால் தமிழகத்தில் பல்வேறு சாதிய மோதல்கள் உருவாகும் என்று, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருக்கும் ஒன்பது தியேட்டர்களில் திரெளபதி படத்தை வெளியிடக் கூடாது என்று திரையரங்கு உரிமையாளர் மற்றும் மேலாளர்களை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் யுவராஜ், ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் பலர் மனுவை அளித்தனர்.

மேலும், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளரை சந்தித்தும் திரெளபதி படம் வெளியிட கூடாது என்று இவர்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. படம் வெளியே வந்த பிறகு காட்சிகளை நீக்குவது பற்றியோ, படத்தை தடை செய்வது பற்றியோ பேசலாம் ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பே தடை செய்யச் சொல்வது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திரெளபதி பட இயக்குனர்

திரெளபதி படத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பெண்கள், நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு சமூக மக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விசிக மற்றும் பெரியாரிஸ்டுகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பலருக்கு வியப்பாக உள்ளது.