கேரளாவில் பிறந்த பாத்திமா பாபு முதன்முதலில் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான கல்கி படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு பார்த்தேன் ரசித்தேன், லேசா லேசா, மனதை திருடிவிட்டாய் போன்ற தமிழ் படங்களிலும் மேலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று மீண்டும் மக்களிடையே பேசப்படும் நட்சத்திரமாக மாறினார். ஆனால் தற்போது போதிய அளவு சினிமா மார்க்கெட் இல்லாததால் சீரியல்களில் நடித்து வருகின்றார். திரையுலகினர் இணையத்தில் அடிக்கடி தங்களது புகைப்படத்தை பதிவேற்றுவது போல் பாத்திமா பாபுவும் தனது பழைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். இளம் வயதில் தான் அழகாக இருந்த படங்களை மலரும் நினைவோடு தனது இன்ஸ்டாகிராமில் பதிந்துள்ளார்.

சிறுவயதில் பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படத்தை இணையவாசிகள் அதிகம் விரும்பியுள்ளனர். முதலில் செய்தி வாசிப்பாளர் பிறகு சினிமா பிரபலம் என்று வளர்ந்து வந்த பாத்திமா பாபு தற்போதைய புதிய நடிகர் நடிகைகளுக்கு ஒரு வகையில் முன்னுதாரணம் என்றும் கூறலாம்.
