சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

0
195
Cinema should not be brought into the temple! The court warned Ayyappan devotees!
Cinema should not be brought into the temple! The court warned Ayyappan devotees!

சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை.இங்கு கார்த்திகை மாதம் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.அவ்வாறு நடை திறக்கப்படும் பொழுது அனைத்து இடங்களிலும் இருந்தும் மாலை அணிந்து விரதம் இருந்து வருவார்கள்.அவ்வாறு கடந்த கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் சபரிமலையில் கோவிலுக்கு பயணம் செய்தனர்.நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் துணிவு,இந்த படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.இந்நிலையில் சபரிமலைக்கு மாலை அணிந்த அஜித்தின் ரசிகர்கள் துணிவு படத்தின் போஸ்டரை கொண்டு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.அதனை தொடர்ந்து அதுபோலவே தற்போது விஜய் ரசிகர்கள் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று வாரிசு பட போஸ்டருடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.இந்த புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

இவ்வாறன செயல்கள் ஐயப்ப சுவாமி பக்தர்களிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளது.மேலும் பலரும் இறைவனை தரிசனம் செய்ய வரும்பொழுது சினிமாவை விட்டு வெளியே வாருங்கள் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் சபரிமலை கோவிலுக்குள் சினமா போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் கொண்டு செல்லவும்,இசைக்கருவிகள் இசைப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளனர்.மேலும் கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு நல்ல முறையில் கடவுளை வழிபட உரிமை உள்ளது.ஆனால் அது கோவிலின் நடைமுறை மற்றும் பராம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்.

Previous articleஆளுநரை வெளியேற்ற பலே திட்டம்! ஆளும் கட்சியின் திடீர் ஆலோசனை கூட்டம்!!
Next articleமாஸ்டர் பிளான் போட்ட முதல் மனைவி! தீர்த்துக்கட்டிய கணவர்!