ஆஸ்கர் விருதினரின் அமெரிக்க சங்கத்தில் (ASC) இடம் பெற்றுள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!!

Photo of author

By Gayathri

ஆஸ்கர் விருதினரின் அமெரிக்க சங்கத்தில் (ASC) இடம் பெற்றுள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!!

Gayathri

Cinematographer Ravivarman has been inducted into the American Society of Oscar Winners (ASC)!!

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தனக்கென்று தனித்துவமான இடத்தை பிடித்து வைத்துள்ளவர். பைவ் ஸ்டார், அந்நியன், ஆட்டோகிராஃப், பொன்னியின் செல்வன் போன்ற அற்புதமான பல படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரின் தனித்துவமான ஒளிப்பதிவிற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளவர். தற்சமயம் பல நாடுகளில் உள்ள ஆஸ்கார் விருதுகள் பெற்ற ஒளிப்பதிபவர்களின் கனவான அமெரிக்க சங்கத்தில் (ஏ.எஸ்.சியில்)இடம்பெற்றுள்ளார். இவரே இந்தியாவில் இரண்டாவது நபராக அச்சங்கத்தில் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் சந்தோஷ் சிவன் மட்டுமே இந்தியாவின் சார்பில் அச்சங்கத்தில் இணைந்திருந்தார்.

இவர் முதன்முதலாக திரையுலகில் ஜவலமர்மம் என்ற மலையாள திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார். அதைத் தொடர்ந்து தமிழில் பல வெற்றி படங்களை அளித்துள்ளார். தற்சமயம் இவர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை ஒளிப்பதிவு செய்து வருகிறார். அமெரிக்க ஒளிப்பதிவு சங்கத்தில் சேர்ந்த பிறகு அவர் மிகவும் மகிழ்ச்சியோடு தன்னை இச்சங்கத்தில் இணைத்ததற்காக ஏ. எஸ். சி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார். உலகின் பல இடங்களில் உள்ள தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களின் தலைமையே ஏ.எஸ்.சி. மேலும் ஏ.எஸ்.சி மூலம் ஒளிப்பதிவர்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றது.

இதன் உறுப்பினர்களின் கலந்தாய்வு மூலம் படங்களின் ஒளிப்பதிவு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. இதில் மொத்தமாகவே 400 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். பலரின் கனவாக இருக்கும் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதற்கு நான் அடைந்த கஷ்டங்களே காரணம். நான் அதற்கு பாத்தியமாக செயல்படுவேன் என்றும் கூறியுள்ளார். இந்த வெற்றியை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட குழுவோடு கேக் வெட்டி செலிபிரேட் செய்துள்ளார்.