Cini Report: வாத்தியை ஓவர்டேக் செய்த பகாசூரன்!! ஒரே நாளில் 1.5 கோடியை கடந்து சாதனை!!  

Photo of author

By Rupa

Cini Report: வாத்தியை ஓவர்டேக் செய்த பகாசூரன்!! ஒரே நாளில் 1.5 கோடியை கடந்து சாதனை!!  

Rupa

cini-report-bhagasuran-overtook-the-duck-1-5-crore-in-a-single-day-record

Cini Report: வாத்தியை ஓவர்டேக் செய்த பகாசூரன்!! ஒரே நாளில் 1.5 கோடியை கடந்து சாதனை!!

இயக்குனர் மோகன் ஜி தற்போது வரை பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களை எடுத்துள்ளார். இதில் அதிக அளவு வெற்றி வாகை சூடிய படமாக திரௌபதி அமைந்துள்ள நிலையில் தற்பொழுது அதனையே முறியடிக்குமாறு பகாசூரன் உள்ளதாக கூறுகின்றனர்.

அந்த வகையில் பகாசுரன் படமானது பெண்களை எச்சரிக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் உள்ளது என பல விமர்சனங்கள் வந்தாலும், ஒரு பக்கம் எதிர்மறையான விமர்சனங்களும் வந்த வண்ணமாகவே தான் உள்ளது. பெண்கள் தற்பொழுது உள்ள டெக்னாலஜி மூலம் தவறுதலான பாதைக்கு அழைத்துச் செல்ல பட்டு விடுகிறார்கள் என்பதை எதிர்மறையாக கூறியது போலவும், மீண்டும் பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் இவர்களை கண்காணிக்க வேண்டும் என்ற வகையில் எதிர்மறையான வசனங்கள் இருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இருப்பினும் இயக்குனர் செல்வராகவன் தனது தந்தை கதாபாத்திரத்தை மிகவும் அற்புதமாக நடித்துள்ளதாக பாராட்டுகள் குவிகிறது. மேலும் இப்படத்தில் நடராஜ், ராதாரவி உள்ளிட்ட பிரபலங்களும் உள்ளனர். ஒரு நாளில் மட்டும் இப்படம் ஆனது ரூ 1.5 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படத்துடன் தனுஷின் வாத்தி படம் வெளியான நிலையில் அதனையே முந்திவிட்டதாக கூறுகின்றனர்.