ரஜினி மற்றும் அஜித்திற்குமிடையே மோதல்! மூன்றாவதாக போட்டிக்கு வரும் நபர் இவர்தானா!

0
143
Clash between Rajini and Ajith! Is this the third person to compete?
Clash between Rajini and Ajith! Is this the third person to compete?

ரஜினி மற்றும் அஜித்திற்குமிடையே மோதல்! மூன்றாவதாக போட்டிக்கு வரும் நபர் இவர்தானா!

தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகைகள் வந்தாலே ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அவர்களது தலைவர்களின் படங்கள் ரிலீஸ் ஆகுவது தான் பெரிய கொண்டாட்டம்.தற்போது ரஜினி,அஜித் போன்றவர்களின் படபிடிப்புகள் நடந்து முடிந்து இறுதி கட்ட வேளைகளில் உள்ளது.குறிப்பாக அஜித்தின் வலிமை பட அப்டேட்டை இளைஞர்கள் கேட்டு பெரும் சர்ச்சையை கொண்டுவந்தனர்.அதனையடுத்து அஜித் அதனை கண்டிக்கும் விதமாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.அதற்கடுத்ததாக நேற்று கோவில் பூசாரியைக் கூட அஜித் ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை.கோவிலில் சாமிக்கு பூஜை செய்துவிட்டு அர்ச்சனை தட்டை எடுத்து வரும் போது அஜித்தின் ரசிகர்கள் சாமி வலிமை அப்டேட் எப்பொழுது என்று கேட்டார்கள்.அது பெருமளவு இணையத்தில் வைரலானது.

தற்போது அண்ணாத்த படத்தை எதிர்பார்த்து ரஜினி ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அப்படம் தீபாவளி பண்டிகையின் போது வெளிவரும் என்ற அதிகராப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.இதனையடுத்து அஜித்தின் வலிமை படமும் தீபாவளி பண்டிகை அன்றே ரிலீஸ் ஆக போகிறது என்று திரையுலக வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.இந்நிலையில் இரு படங்களும் தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ் ஆனால் வசூல் வேட்டை ஏதாவது ஓர் படத்திற்கு குறைந்து காணப்படும்.அத்தோடு ரசிகர்களிடையே கலவரம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகபட்சமாகவே உள்ளது.

இதற்கிடையே இந்த இரண்டு படங்களை எதிர்க்கும் விதமாக கே.ஜி.எப் 2 படமும் ரிலீஸ் ஆக போவதாகவும் கூறி வருகின்றனர். கே.ஜி.எப் முதல் பாகமே உலகம் முழுவதும் பெருளமவு வெற்றியடைந்தது.தற்பொழுது இரண்டாம் பாகத்திற்கு மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.இது மூன்றாவது படமாக ரிலீஸ் ஆனால் இரண்டு படங்களின் வசூல் வேட்டையும் அடிமட்டத்திற்கு குறைந்துவிடும்.அதுமட்டுமின்றி இதில் ஏதேனும் இரு படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் மீதமுள்ள ஓர் படம் கிறித்துமஸ் அல்லது புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகும் என்றும் திரையுலக சுற்றுவட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

Previous article7 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா!! அமைச்சர்களின் பட்டியல் வெள்யீடு!!
Next articleநீயா? நானா? என போட்டி போட்டுக்கொள்ளும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க!