10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு!! மதிப்பெண் விவரங்களுடன்!!

Photo of author

By Gayathri

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு செய்முறை தேர்விற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

பொதுத் தேர்வில் இடம்பெற்று இருக்கக்கூடிய இந்த செய்முறை தேர்விற்கான நேர விவரங்கள் :-

✓ இயற்பியல் மற்றும் வேதியல் – 1 மணி நேரம்
✓ தாவரவியல் மற்றும் விலங்கியல் – 1 மணி நேரம்

என செய்முறை தேர்வானது 2 மணி நேரம் நடைபெற உள்ளது. அதுவும் 2 பிரிவுகளில் அதாவது காலை 9 மணி முதல் 11 மணி வரையும் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையும் என இரு வேலைகளில் இந்த செய்முறை தேர்வானது நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் விவரங்கள் :-

✓ வினா ஒன்றுக்கு – 5 மதிப்பெண் எனக்கான கெட்டு இயற்பியல் வேதியியல் தாவரவியல் விலங்கியல் என ஐந்திற்கும் சேர்த்து மொத்தம் 20 மதிப்பெண்கள் வழங்கப்படுவதாகவும்

✓ மாணவர்கள் ஆய்வு கூட வருகை – 1 மதிப்பெண்
✓ மாணவர் ஆய்வக செயல் திறன் – 1 மதிப்பெண்
✓ மாணவர் ஆய்வக ஈடுபாடு – 1 மதிப்பெண்
✓ ஆய்வக பதிவுக் குறிப்பேடு – 2 மதிப்பெண்கள் என இதற்கு ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.

செய்முறை தேர்விற்கு 25 மதிப்பெண்கள் மற்றும் கருத்தியல் தேர்விற்கு 75 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வானது நடைபெறுகிறது.

குறிப்பு :-

செய்முறை தேர்வில் கட்டாயமாக 25 மதிப்பெண்களுக்கு 15 மதிப்பெண்கள் பெற்று எடுத்தல் அவசியம்.