சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்!! அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!!

Photo of author

By CineDesk

சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்!! அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் கச்பாபெட்டை ஒராட்சிக்கு உட்பட்டு கள்ள கவுண்டன் பாளையம் என்னும் பகுதி உள்ளது. இதில் முருகன் மற்றும் அமுதா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர்.

இந்த தம்பதிகளுக்கு ரித்தீஷ் என்ற பதினெட்டு வயது கொண்ட மகன் மற்றும் ஜீவா என்ற பதினாறு வயதுடைய இரண்டாவது மகனும் இருக்கின்றனர். முதல் மகன் பன்னிரெண்டாம் வகுப்பும், இரண்டாவது மகன் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

நேற்று முருகனின் இரண்டாவது மகன் ஜீவா தன்னுடைய மோட்டார் சைக்கிளில் பழனி சாலையில் ஈரோட்டினை நோக்கி சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி ஒன்று இவரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த கோர விபத்தில் ஜீவா லாரியின் சக்கரத்தில் மோதி நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த காவல் துறையினர்,

சம்பவ இடத்திற்கு வந்து ஜீவா உடலை மீட்டு அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.

கண் இமைக்கும் நேரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்ஹி உள்ளது.

இறந்த சிறுவனின் பெற்றோர்கள் கதறி அழுகிற நிகழ்வு ஈரோடு மாவட்டத்தில் பதற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.