பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்! தலைவாசல் தனியார் பள்ளி ஆசிரியர் கைது! 

0
184
Class 10 student rape! Talivasal private school teacher arrested!
Class 10 student rape! Talivasal private school teacher arrested!

பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்! தலைவாசல் தனியார் பள்ளி ஆசிரியர் கைது!

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.அப்போது அந்த மாணவி வீடு திரும்பவில்லை.மாயமான அவரை அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அதனையடுத்து மாணவி காணாமல் போனதாக தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் முத்தையன் என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

மேலும் அதே ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதி ஆத்தூர் பேருந்து நிலையத்தில் போலீசார் அந்த மாணவியை மீட்டனர்.மேலும் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள்.அப்போது அந்த மாணவி ஆசிரியர் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.அந்த தகவல் அங்குள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனையடுத்துஆசிரியார் முத்தையன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்டில் நடந்து வந்தது.இந்த வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்து தீர்பளிக்கப்பட்டது.அதில் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக முத்தயனுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ ஆறாயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Previous articleஓடும் ரயிலில் அரங்கேறிய  சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்!
Next article“அரசியல் மட்டும் தான் செய்ய முடியும்” ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து பாமக தலைவர் கருத்து!