12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! பட்ட படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
இன்று தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
இந்நிலையில், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்ய ஜூலை 19 ஆம் நாள் கடைசி நாளாகும்.
மாணவர்கள் அனைவரும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண் முறையை ஜூலை 22-ம் தேதி வழங்கப்படும்.
விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்க ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை சேவை மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான தேர்வு பட்டியல் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.