பள்ளிகளுக்கு ஆன்லைன் முறைகளில் வகுப்புகள் தொடக்கம்!! பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு!!
எந்த ஆண்டிலும் இல்லாத பருவ மழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்த பருவமழை தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்ந்து கொண்டே வருவதால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது.
அந்த வகையில் தலைநகரமான டெல்லியில் 40 ஆண்டுகளாக இல்லாத பருவமழை இந்த ஆண்டு பெய்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு தீவிர மடைந்த இந்த பருவ மழையால் டெல்லி ,ஹரியானா ,பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்படும் அபயாம் உள்ளது.
ஏற்கனவே தலை நகரான டெல்லியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளபெருக்கதால் பல்வேறு குடும்பங்கள் தங்களது குடியிருப்புகளை இழந்து தவிக்கின்றனர்.
அந்த வகையில் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த வெள்ளபெருக்கத்தை கருத்தில் கொண்டு அந்த மாநில அரசு வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது.
இதனால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் வெள்ளபெருக்கத்தில் குடியிருப்புகளில் இருந்து அடித்து செல்லப்பட்ட அனைத்து ஆவணங்களும் அரசு சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அந்த வகையில் பள்ளி குழந்தைகள் அவர்களின் உடமைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் குடியிருப்புகளை இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும் சூழ்நிலை சரியாகும் வரை முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.